வைகாசி திருவிழா: கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

7257பார்த்தது
வைகாசி திருவிழா: கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா தற்பொழுது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்வான "அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் திருவிழா" நாளை (மே 27) நடைபெற உள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதற்கும் நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி