விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று கிண்டலாக கூறிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் இன்று (ஜூலை 9) பேட்டியளித்த அவர், இந்த சொற்கள் திருமாவளவனின் மனதை புண்படுத்தியிருந்தால் அதை திரும்ப பெறுவதாகவும், அவர் ஒரு நல்ல தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பக்கபலமாக இருந்து வருவதாகவும், அவர் மீது தமக்கு இம்மி அளவும் வருத்தம் இல்லை என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.