மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திகேயன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். மதிமுக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அதற்கு நேர் எதிர் கொள்கை கோட்பாடு கொண்ட கட்சியில் கார்த்திகேயன் இணைந்துள்ளார். சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று (பிப்., 28) சென்ற கார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.