'வந்தே மாதரம் 150' - தேசிய கீத கொண்டாட்டங்கள் தொடக்கம்

4283பார்த்தது
இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு நடைபெறும் தேசிய கீத கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று (நவ., 07) டெல்லியில் தொடங்கி வைத்தார். மேலும், இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார். வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல், நாட்டின் நாகரிக, அரசியல் மற்றும் கலாசார உணர்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.