அடிக்கடி மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு வஞ்சிர மீன் ஒரு சிறந்த தேர்வாகும். புரதச்சத்து மற்றும் வைட்டமின் பி12 அதிகமுள்ள இந்த மீன், தசை வளர்ச்சியை தூண்டுவதுடன் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு வாரத்திற்கு இருமுறை இத்தகைய எண்ணெய் சத்துமிக்க மீன்களை உணவில் சேர்த்து கொள்வது இதயத்திற்கும் மனநலத்திற்கும் நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.