திண்டிவனம் விசிக எம்எல்ஏ வன்னியரசு, தஞ்சை பாபநாசம் தொகுதி ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் இன்று (மே 22) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. நேற்று தவெக,
காங்கிரஸ் கட்சியின் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று 2 எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஆகின்றனர். இதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.