நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்முறையாக இயக்கி, தயாரித்து, நடித்துள்ள "சரஸ்வதி" திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டுள்ளார். தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' நிறுவனம் மூலம் உருவாகியுள்ள இந்த திரில்லர் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.