வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா காலமானார்

31பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா காலமானார்
தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்கார மன்னரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் தற்போதும் பாஞ்சாலங்குறிச்சியில் வசிக்கின்றனர். அந்த வகையில், அவரது 4வது வாரிசான வீரபாண்டிய துரையின் மகனும், 5வது வாரிசான வீமராஜா ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை (87) நேற்று (மார்ச் 03) காலமானார். தியாகிகளுக்கான ஓய்வூதியம் எடுக்க ஓட்டப்பிடாரம் அஞ்சலகம் சென்றபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி