சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணிக்கு துணைபோன அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், சிறப்பு புலனாய்வு குழு எந்த அழுத்தமுமின்றி நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய மறுவாழ்வு உதவிகளை வழங்கி அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.