ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஏழை காய்கறி விற்பனையாளர் அமித் சேரா, தனது நண்பரிடம் கடன் பெற்று பஞ்சாபில் ரூ.11 கோடி பரிசு மதிப்புள்ள லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அதே சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது. இந்நிலையில், தனக்கு கடன் கொடுத்து உதவிய நண்பருக்கு பரிசுத் தொகையில் ஒரு கோடியை கொடுத்துவிட்டு மீதி பணத்தை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.