வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

480பார்த்தது
வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக வேளாங்கண்ணி மற்றும் கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில்கள் (07361/07362 & 07365/07366) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆக.27, செப்.1, 6 ஆகிய தேதிகளில் வாஸ்கோடகாமாவிலிருந்தும்; ஆக.29, செப்.3, 9 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்தும் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி