வேளாங்கண்ணி சுற்றுலா வேன் விபத்து: ஒருவர் பலி, 15 பேர் காயம்

7035பார்த்தது
வேளாங்கண்ணி சுற்றுலா வேன் விபத்து: ஒருவர் பலி, 15 பேர் காயம்
கடலூர் அருகே சுற்றுலா வேன் விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 15 பேர் காயமடைந்தனர். 
மருதூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பியபோது, நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்முடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி