
திருப்பத்தூர் அருகே சுவர் இடிந்து சிறுவன் பலி!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஓணாங்குட்டை பகுதியில் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அதிரூபன் (6) என்ற சிறுவன் மீது எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் உடல் நசுங்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். உமராபாத் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







































