ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் 14 மற்றும் 17 வயதுடைய நான்கு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் ரமேஷ் நேற்று நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். சோதனையில் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.