ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று மே 13ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி செல்வராசு, சொற்பொழிவாளர் ஜெரால்ட் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.