திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த கூலித்தொழிலாளி முனுசாமி, தோல் பதனிடும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.