திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கன்னிகாபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், நேற்று (மே. 15) ஒரு மது பாட்டிலுக்கு ரூ. 5 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.