ஆம்பூர் அருகே நகை, பணம் திருடியவர் கைது

774பார்த்தது
ஆம்பூர் அருகே நகை, பணம் திருடியவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உதயகுமார் வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது. இந்த திருட்டில் உதயகுமாரின் நண்பரான சேட்டு ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, உமராபாத் காவல்துறையினர் சேட்டுவை நேற்று முன்தினம் (மே 21) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி