வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கிடங்கினை அமைச்சர் காந்திராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை உட்பட பலர் உடனிருந்தனர்.