ஆம்பூரில் முருகன் கோயில் பிரதிஷ்டை செய்து வழிபாடு

53பார்த்தது
ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலை பிரதிஷ்டை செய்து ஸ்ரீ விநாயகர் மற்றும் திருமலை திருப்பதி சிலைகளுக்கு தங்க கவசம் சாற்றும் விழாவில் பொற்கோவில் ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று முதல் கால யாக பூஜையை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலை பிரதிஷ்டை செய்தும், அருள்மிகு விநாயகர், ஸ்ரீ கெங்கையம்மன், மூலவர் மற்றும் உற்சவர், துர்கை, வள்ளி தெய்வானை முருகர், ஐயப்பனுக்கு புதியதாக தங்க கவசம் சாற்று விழா திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலய தர்மகர்த்தா மற்றும் அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று அதிகாலை முதல் கோ பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்று மாலையில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி