திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட குப்பம் பிரிவு சாலைப் பகுதியில் புதிய பைப்லைன் அமைக்கும் பணிகள் காரணமாக நேற்றிரவு தோண்டப்பட்ட பள்ளம் பணி நிறைவடையாமல் அப்படியே உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளிப் பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் காவல் நிலையம் பின்புறமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபரீதத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.