வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி வர்ணம் பூசும் (பெயிண்டர்) தொழிலாளியான இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் மனைவியுடன் வசித்து வரும் இவர் கடந்த சில தினங்களாக ஆம்பூர் பகுதியில் வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடித்துவிட்டு இன்று தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் மேம்பாலத்தின் உயர் மட்டத்திலிருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மேம்பாலத்தின் மீது தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதால் நெடுஞ்சாலை துறையினர் முறையான தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.