திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் அனுமதி இன்றி கனிம வளமும் மணலும் மாட்டு வண்டிகள் மூலம் கொள்ளையடிக்கப்படுவதாக மனு அளிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் இதுகுறித்து கண்டும் காணாமல் செயல்படுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்செல்வன் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.