பாட்டாளி மக்கள் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரக்கோணம் கிழக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனைகளை வழங்கினார்.