திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே 70 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நண்பர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்டத்தில் அதிக குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர். இனி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.