ஆம்பூரில் பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி சாலை மறியல்

0பார்த்தது
ஆம்பூரில் பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கிஷாப், பேஷ்இமாம் நகர், கோல்டன் சிட்டி, ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை, கழிவுநீர், கால்வாய், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம சபையை புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி போராடியும் பயனளிக்காத நிலையில், வெங்கடசமுத்திரம் கூட்டச்சாலையில் மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து மட்டுமே செல்வதாகவும், அடிப்படை வசதிகள் அமைக்க எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்தி