திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி காளிகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (16) என்ற 8ஆம் வகுப்பு மாணவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.