வேலூரில் அடுத்தடுத்து நடந்த இரண்டு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி வேலூரில் ரமணி, ஷாலினி ஆகியோரிடம் தங்கச் சங்கிலிகளை ஹெல்மெட் அணிந்த இருவர் பறித்துச் சென்றனர். விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியில் இருந்து பைக்கை காட்பாடிக்கு ரயிலில் வரவழைத்து, நம்பர் பிளேட் இல்லாமல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.