திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அக்பர் பாஷா - அர்ஷியா தம்பதியினரின் 3 மாத பெண் குழந்தை அர்ஃபலா பாத்திமா, வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். தாயார் அர்ஷியாவிடம் நடத்திய விசாரணையில், 3 குழந்தைகளை வளர்க்க முடியாததாலும் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சல் காரணமாக 3-வது குழந்தை பாத்திமாவை கொலை செய்ய முடிவு செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும் அதில் குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அர்ஷியாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.