வாணியம்பாடி: தேநீர் கடையில் வேலை செய்யும் முகமது பைசான் தனக்கு ரூ. 1.61 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடப்பதாகவும், அப்பாவி கூலித் தொழிலாளர்களை குறிவைத்து மோசடி நடப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.