வேலூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி

1பார்த்தது
வேலூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகண்டன் (37) மற்றும் அவரது மனைவி கலையரசி (35) ஆகியோர் மும்பையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு தாதர் விரைவு ரயிலில் பயணம் செய்தனர். புதன்கிழமை அதிகாலை ஆரணி அருகே ரயில் சென்றபோது, சிவகண்டன் கதவருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கலையரசியும் கீழே விழுந்தார். இருவரும் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி