கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தின் ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (நவம்பர் 20) கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டிய நிலையில், பூஞ்சோலை, சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யகுமார், அடுத்த விசாரணை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.