அணைக்கட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

407பார்த்தது
அணைக்கட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலை பகுதி முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அப்பாவுவின் மனைவி பிரியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று பிரசவ வலியால் துடித்த அவரை வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி