ஆம்பூர் அருகே ரயிலில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி!

0பார்த்தது
ஆம்பூர் அருகே ரயிலில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியார் நகரைச் சேர்ந்த 18 வயது ரூபன், சென்னை தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறையில் பெங்களூருவில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் ஆம்பூர்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி