
வேலூரில் போலீசாரை தாக்கியவர் கைது
வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று கஸ்பா வசந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொது இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த தாமோதரன் மற்றும் மூன்று பேரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது மது போதையில் இருந்த தாமோதரன், ஏட்டு பாலாஜியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாமோதரனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





































