
ஒடுகத்தூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (33) பெங்களூருவில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அம்பிகா (30) நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


























