வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே இன்று (செப்.21) மதியம் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் திலீப் குமார் என்ற மாணவனை சக மாணவன் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார்.
இதில் மாணவனுக்கு (திலீப் குமார்) தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவன் ரத்த காயங்களோடு இருந்ததைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் மாணவனை மீட்டு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.