குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்களுக்கான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (நவம்பர் 12) குடியாத்தத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, வட்டாட்சியர் பழனி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.