வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் கெங்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அடையாள அட்டைக்கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவரின் பரிசோதனை அடிப்படையில் மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவ சான்றிதழை வழங்கினார்.
இந்த முகாமில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சித்ரா குமார பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.