பள்ளிகொண்டாவில் பாம்பு கடித்து முதியவர் பலி

62பார்த்தது
பள்ளிகொண்டாவில் பாம்பு கடித்து முதியவர் பலி
பள்ளிகொண்டா ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 75). இவர், நேற்று அதிகாலையில் வீட்டில் உள்ள கட்டி லில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையா உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி