வேலூர் அருகே சாராயம் விற்றவர் கைது

82பார்த்தது
வேலூர் அருகே சாராயம் விற்றவர் கைது
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அணைக்கட்டு தாலுகா ஜார்தான்கொல்லை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சாராயம், கள்ளச்சந்தையில் மதுவிற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் கேனில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற ஜார்தான்கொல்லை கனிசைபுதூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சிதம்பரம் அந்த சாராயத்தை யாரிடமிருந்து வாங்கினார். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி