அணைக்கட்டு மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ

1149பார்த்தது
அணைக்கட்டு மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில், திமுக தெற்கு பகுதி மாவட்ட பொறுப்பாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் இன்று (பிப். 22) கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். அப்போது அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்த சந்திப்பின்போது, பகுதி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி