வேலூரில் பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி

3பார்த்தது
வேலூரில் பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி
வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த லேப் டெக்னிசியன் ரியாஸ் அகமது (40), நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவசம்பட்டு அருகே பாலாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி