வேலூர்: சிலாப்பிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

69பார்த்தது
வேலூர்: சிலாப்பிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
வேலூர் சதுப்பேரியைச் சேர்ந்தவர் குமார் (50), பெயிண்டர். இவர் கஸ்பா மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கச் சென்றார். அவர் வீட்டின் சிமெண்டு சிலாப்பில் அமர்ந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குமாரை மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக் டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி