பள்ளிகொண்டா: இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

61பார்த்தது
பள்ளிகொண்டா: இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் நாகலிங்கம் (வயது 49) என்பவர் மரம் இழைக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், யுவராஜ் உள்ளிட்ட போலீசார் மோட்டார் சைக்கிளை தேடத்தொடங்கினர். அப்போது சாவடி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதை பார்த்த போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெரியகாஞ்சீபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தினேஷ் (வயது 21) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடிய தும் தெரியவந்தது.

இவர் மீது காஞ்சீபுரத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி