வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 23) நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் முழுவதும் 900 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 41 இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.