அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை வேலூர் ஒன்றிய திமுக. செயலாளர் சி.எல்.ஞானசேகரன் தொடங்கிவைத்தார். இதில் வேலூர் ஒன்றியக்குழுத் தலைவர் அமுதா ஞானசேகரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ராமலிங்கம், காசி, ஆதிதிராவிடர் நல மாவட்ட அமைப்பாளர் திவாகர், கீழ்மொணவூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாபழனி, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.