அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருட்டு

50பார்த்தது
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருட்டு
அடுக்கம்பாறையை அடுத்த மேட்டுப்பாளையம் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 19-ந் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். மருத்துவமனை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரமேஷ் உள்ளே சென்றார். 

இதனை நோட்டமிட்ட மர்மநபர் ரமேஷின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி