தொரப்பாடி, எழில் நகரைச் சேர்ந்த ஆயிஷா பா்வீன் (19) தனியாா் கல்லூரியில் படித்து வருகிறார். அரியூரைச் சேர்ந்த விக்னேஷ் (19) மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். புதன்கிழமை ராம்சேட் நகர் வழியாக கல்லூரிக்குச் சென்ற மாணவியை தடுத்து நிறுத்தி விக்னேஷ் காதலிக்கும்படி வற்புறுத்தி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், விக்னேஷ் தனது வீட்டுக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.