வேலூர்: களைகட்டிய பொய்கை வாரச்சந்தை

66பார்த்தது
வேலூர்: களைகட்டிய பொய்கை வாரச்சந்தை
வேலூரை அடுத்த பொய்கையில் வாரச்சந்தை நடந்தது. வெளிமாவட்டத்தில் இருந்து உயர் ரக கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இந்த மாடுகளை உள்ளூர் விவசாயிகள் போட்டி போட்டு அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை உயர்ரக கறவை மாடுகள் விற்பனையானது. எச்.எப். ரக கறவை மாடு ஒரு வேளைக்கு 10 முதல் 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். எனவே எச்.எப். ரக கறவை மாட்டை ஆற்காட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ. 75 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார்.